அதனடிப்படையில் கோட்ட பொறியாளர் மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள் தலைமையில் 22 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் கடந்த 18ம் தேதி முதல் உள் தணிக்கை செய்யும் பணியைத் துவங்கி ஆய்வு செய்து வருகின்றனர். அவ்வகையில், தர்மபுரி மாவட்டத்திற்கான சிறப்பு குழு கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில் நேற்று பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உட்கோட்ட பகுதிகளில் ஒருங்கினைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய சாலைகளை உள் தணிக்கை செய்தனர்.
பாலக்கோடு அடுத்த எக்காண்டஅள்ளி முதல் தீத்தாரஅள்ளி செல்லும் சாலையில் அமாணிமல்லாபுரம் பகுதியில் சாலை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தார்சாலையின் நீளம், அகலம், பணியின் தரம் ஆகியன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தார்சாலையில் டிரில்லர் மூலம் குழி தோண்டி குறிப்பிட்ட ஆழங்களில் பயன்படுத்திய பொருட்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது, இது குறித்த அறிக்கை நெடுஞ்சாலைத்துறை இயக்குநருக்கு அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த உள் தணிக்கையின் போது கோட்டப் பொறியாளர்கள் நடராஜன், தனசேகரன். உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

