பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய ஆங்கில துறையும் கன்னியாகுமரி கேப் கோமரின் டிரஸ்ட்டும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரியார் பல்கலைக்கழக மாண்புமிகு துணை வேந்தர் பேராசிரியர் முனைவர். R. ஜெகநாதன் அவர்கள் முன்னிலையில், பல்கலைக்கழக பதிவாளர் பேரா. முனைவர் D. கோபி அவர்கள் கையெழுத்திட்டார். இந்நிகழ்வில் கேப் கோமரின் டிரஸ்ட் தலைவர் முனைவர் ரெஜின் சில்வர்ஸ்ட், துணைச் செயலர் டாக்டர். ஹாசின் சில்வர்ஸ்ட், பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் முனைவர் மோகன சுந்தரம் மற்றும் ஆங்கிலத்துறை தலைவரும் இணைப்பேராசிரியருமான முனைவர் சி கோவிந்தராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இனிவரும் காலத்தில் பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய ஆங்கிலத்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்தப்படுவதற்கும், ஆராய்ச்சி தொடர்பான பயிலரங்குகள் நடத்துவதற்கும் ஏனைய பிற கல்வி சார்ந்த நிகழ்வுகள் நடத்துவதற்கும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

