முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினமான இன்று அவரைப் போற்றும் வகையில் காந்தி பேரவை சேர்ந்த தொண்டர் 31வருடமாக விரதம் மேற்கொண்டு இரு சக்கர வாகன பயணம் மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்ட காந்தி பேரவையின் தலைவர் ஆர் ஜி கே பூபதி இவர் மெணசி பகுதியில் வசித்து வருகிறார் தீவிர ராஜீவ்காந்தியின் பற்றுடையவர் என்பதால் ராஜீவ்காந்தியின் இறப்பிற்கு பின்பு வருடம்தோறும் அவருடைய நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து அனுசரிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் மிதிவண்டி உள்ளிட்ட வாகனங்களில் சென்று நினைவு அஞ்சலி செலுத்துவது வழக்கம் இந்த நிலையில் இன்று ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினமான இன்று மெனசியிலிருந்து, அரூர், மொரப்பூர், தருமபுரி வழியாக பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயம் வரை இருசக்கர வாகனத்தில் கருப்புக்கொடி கட்டி பயணம் மேற்கொண்டார், இந்த பயணத்தில் அவருடைய பேரனும் கலந்துக்கொண்டார்.

