தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எட்டிப்பட்டி அழகிரிநகரில் கிராம மக்களே ஒன்றிணைந்து அம்பேத்கரின் திருவுருவச் சிலை வைத்துள்ளனர். அனுமதியின்றி சிலை வைத்ததாக கூறி வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சிலையை அகற்ற வேண்டும் என விசிக ஒன்றிய செயலாளர்கள் மா.ராமசந்திரன் எம்.எஸ். மூவேந்தன் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏற்கனவே ஓராண்டுக்கு முன்பு வைக்கப்பட்ட சிலையை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரால் அகற்றினர் பின்னர் மீண்டும் அதே இடத்தில் ஊர் பொதுமக்கள் சிலை நிறுவியதாகவும் தகவலறிந்த வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படததால் கிராம மக்கள் விசிகவினர் சிலையின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்பு கிராம மக்களோடு சேர்ந்து விசிக நிர்வாகிகள் தீரன்தீர்த்தகிரி செல்லைசக்தி கேசவன் சுதாகர் வீரமணி உள்ளிட்ட பலர் தொடர்ந்து சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

.jpeg)