தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி.செட்டி அள்ளி ஊராட்சி பெத்தன அள்ளி கிராமத்தில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில் 7.70 இலட்சம் மதிப்பீட்டில் பெத்தன அள்ளி கிராமத்தில் உள்ள தார்சாலை ஊர் கவுண்டர் வீட்டிலிருந்து பெரியசாமி வீடு வரை சுமார் அரை கி.மீட்டர் தூரம் வரை சிமென்ட் பூமி பூஜை ஒன்றிய குழு கவுண்சிலர் முத்துசாமி தலைமையில் நடைப்பெற்றது, மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், பி.செட்டி அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராணி சிவலிங்கம், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர்கள் சிவலிங்கம், பெரியசாமி, சரவணன், செந்தில், ராஜேந்திரன், முனிராஜ், ஆனந்தன், மாது, அன்பரசன், அன்பு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

