தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம், தனியார் கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமையில் செயல் அலுவலர் கீதா முன்னிலையில் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கடைவீதி வழியாக பஸ் நிலையம் வரை பேரணி மற்றும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மா.பழனி தலைமை ஆசிரியர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், பேரூராட்சி துணை தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் பங்குப் பெற்றனர்.

