Type Here to Get Search Results !

காவல்துறை மூலம் காதலனை கரம்பிடித்த காதலி.

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பாடியை சேர்ந்தவர் அம்மாசி என்பவரது மகன்  பெரியசாமி இவர் மொரப்பூர் வனச்சரக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகள் கீதா என்பவரும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்ததாகவும் இதனால் பெரியசாமிக்கு அரசு பணி கிடைத்ததால் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால் அப்பெண் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில் போலீசார் பெரியசாமி அழைத்து விசாரித்ததில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததன் பேரில் கீதாவிற்கும்  பெரியசாமிக்கும்  காவல் நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் விசிக  மொரப்பூர்   ஒன்றிய செயலாளர் திருலோகு, பிஎஸ்பி மாவட்ட பொதுச்செயலாளர் காளிதாஸ், ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், இளையராஜா  ஆகியோர் முன்னிலையில்  திருமணம் நடைபெற்றது.

இதில்  தெய்வம் அருள்பிரகாஷ் மணிவளவன் ரமேஷ் வீரமணி ராகவன்  மற்றும்  உறவினர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies