Type Here to Get Search Results !

விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், முடிவு.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் கண்டுமுதல் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழு நேர / பகுதி நேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், முடிவு செய்துள்ளது.

எனவே, இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், எண்.1, சேலம் மெயின்ரோடு, தருமபுரி என்ற முகவரி அல்லது தொலைபேசி: 04342-230049, செல்போன் 9443938003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies