உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றிய குழு சார்பில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பி சக்கரவேல் தலைமையேற்றார்.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், இரா. சிசுபாலன், சோலை. அர்சுனன், எம். முத்து வி. ரவி, ஒன்றிய செயலாளர்கள் ஜி.சக்திவேல்,என்.பி முருகன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆ. ஜீவானந்தம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கே. ஜி. கருவூரான், தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் சி.ராஜி, இடைக்குழு உறுப்பினர்கள் எம். சாம்ராஜ் ஆர். வாஞ்சிநாதன், எம். செல்வம், ஜி. ரஜினி உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

