தொப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 மே, 2022

தொப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று (11.05.2022) திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அங்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருகை தந்தவர்களிடமும், உள் நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக வருகை தந்த கர்பிணி தாய்மார்களிடம் உரிய சிகிச்சை அளிக்கப்படுகின்றதா என்பதையும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு, பிரசவ அறை, ஸ்கேன் பரிசோதனை அறை இதர பரிசோதனைகள் மேற்கொள்ளும் அறை, மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை சிறப்பாக அளித்திட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளித்து வருகின்றது. வரிய நிலையில் உள்ள சாதாரண எழை எளிய மக்களுக்கும் சிறப்பான சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. நோயாளிகளின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், உரிய பயிற்சிகள் உள்ளிட்ட வற்றையும் வழங்கிட மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அரசு எற்படுத்திக் கொடுத்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படாமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்திட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும். உயிர் காக்கும் உன்னத பணியினை மேற்கொண்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சை பெற வருகை தரும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை சிறப்பாக அளித்திட வேண்டுமெனவும், தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் உத்தரவிட்டார்கள்.

இந்த ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.கே.வாசுதேவன் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad