தருமபுரி ஒன்றிய தேமுதிக சார்பாக அதகபாடி ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது, இந்த நிகழ்வில் தர்மபுரி ஒன்றிய தேமுதிக செயலாளர் விக்னேஷ் குமார் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கழக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் பிக்குமார் மாநில கேப்டன் மன்ற செயலாளர் புல்லட் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் விழாவில் மாவட்ட தேமுதிக அவைத்தலைவர் தங்கவேலு, ஒன்றிய துணை செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செந்தாமரை, மாவட்ட நெசவாளர் அணித் துணைச் செயலாளர் தங்கராஜ், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் கிளை நிர்வாகிகள் மாது, பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக