அரூர் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 90அடி ஆழமுள்ள கிணறில் பூனை ஒன்று விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்ததின் பேரில் அரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் மா. பழனிசாமி அவர்கள் தலைமையில் நீர்த்தாங்கி வண்டியின் மூலம் குழுவினருடன் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி துறை பணியாளர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி விரைந்து செயல்புரிந்து எவ்வித காயமும் இன்றி உயிருடன் அந்த பூனை மீட்கப்பட்டது, இதனை கண்ட அப்பகுதி மக்கள் பூனையை மீட்ட வீரர்களுக்கும், மீட்புப்பணிகள் அழுவளர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக