மோப்பிரிப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மோப்பிரிப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் விதைகள் மற்றும் தென்னங்கன்றுகளை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதில் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர்பசுபதி தோட்டகலை செற்பாறியாளர் மாது, வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) இளரவசி, தோட்டகலை உதவி இயக்குநர் ராஜேஷ்கண்ணன், உதவி செயற்பொறியாளர் சந்திரா, வட்டாச்சியர் கனிமொழி, வேளாண்மை உதவி அலுவலர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி, ஊராட்சிமன்ற தலைவர் சுரேந்திரன், செயலாளர் தளபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

