பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளில் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தரும்படி தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும், குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்பது குறித்தும் பேரூராட்சி சார்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாலக்கோடு பேரூராட்சியில் குப்பை இல்லா நகரம் உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்நிகழ்சியில் பாலக்கோடு அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பாலக்கோடு போலீஸ் ஸ்டேசன் துவங்கி அரசு மருத்துவமனை, பொது பணித் துறை அலுவலகம், தாசில்தார் அலுவலகம், தக்காளிமண்டி வரை நகரின் முக்கிய வீதி வழியாக சென்று குப்பைகளை சேகரித்தனர். குப்பை இல்லா நகரம் உருவாக்குவோம் என்ற கோஷங்கள் முழங்கினர்.
இந்நிகழ்ச்சியை பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி துவக்கி வைத்தார், பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.