மகாபாரத பஞ்ச பாண்டவர்களை மையமாக கொண்டு பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் தர்மராசர் திரௌபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை மையமாக கொண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் படம் எடுக்கப்பட்டது.
இங்கு திரௌபதி அம்மன் தர்மராசர், பீமன், அர்சுணன், நகுலன், சகாதேவன், கிருஷ்ணன், அபிமன்யூ, உள்ளிட்ட, 17 கடவுள்களின் சிலை உள்ளது. பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்துப்பெற்ற இக்கோவில், கூத்தப்பாடி, குள்ளாத்திரம்பட்டி, மடம், பொச்சாரம்பட்டி, அளேபுரம், அக்ரஹாகரம், சின்னப்பநல்லூர் உள்ளிட்ட ஏழு ஊர்களுக்கு பொதுவானது. இந்நிலையில், இக்கோவிலின் தேர்திருவிழா நடைப்பெற்றது. முன்னதாக காலையில் திரெளபதி அம்மன் அக்னி குண்டம் மற்றும் திரெளபதி அம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்ட ஏரளமான சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
பின்னர் மாலையில் தர்மராசர் மற்றும் திரெளபதி அம்மன் சிலைகளை தேரில் வைத்து பின்னர் தேரினை பொதுமக்கள் இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏழு கிராமத்தை சேர்ந்த, ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அங்கு வந்திருந்த அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
சுமார் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏழு ஊர் கவுண்டர்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியில் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கட்டாமணிகவுண்டர் வைகுந்தம் அவர்கள் மகன் செந்தில் அவர்கள் நன்றி கூறினார்.

