பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஸ்ரீ முனிஸ்வரா கபடி குழு நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கபடி பி.அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்றது. பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே.மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்று 25 ஆண்டுகள் வெள்ளி விழாவை முன்னிட்டு இப்போட்டிகள் நடைபெற்றது.சுமார் பத்திற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இந்ந போட்டியினை பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ண்ன் போட்டியை துவக்கி வைத்து முதல் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வில் பென்னாகரம் காவல் உதவி ஆய்வாலர் திரு துரை, அவர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் செண்பகவல்லி சக்தி, மாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாசெந்தில், ராஜேந்திரன் , அனைத்துப் பரிசுகளுக்கும் கோப்பைகளை வழங்கியவர் மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி .முருகன் ஒன்றிய அமைப்பு செயலாளர் முருகவேல் பென்னாகரம் நகர தலைவர் சந்தோஷ் SPமுத்துசாமி, கணேசன்,மற்றும் பி.அக்ரஹாரம் ஊர் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியினை கண்டு களித்தனர்.

