சாஹிப் பயிற்சி மைய மாணவிகளுக்கு 7000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் தருமபுரி மாவட்ட குழு.
தற்போது கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வகையில் எங்களுக்கு விளையாட்டு சார்ந்த உபகரணங்களை ஏற்படுத்தி தாருங்கள் என்றும் நமது சாஹிப் பயிற்சி மைய சார்பில் மாணவ மாணவிகள் கேட்டுக் கொண்ட காரணத்தால் அவர்களின் ஆவலை உணர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு அகில இந்திய மாதர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைமை கிரைஷா மேரி அவர்களுடனும் செயலாளர் ஜே.நிர்மலா ராணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் அவர்களுடனும்சாகிப் பயிற்சி மைய மாணவ மாணவிகளுக்கு தங்களால் முடிந்த விளையாட்டு உபகரணங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டதை ஏற்று இன்று 29/05/2022 தருமபுரி நகரத்திற்கு வரவழைத்து ரூபாய்.7000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்களை வழங்கினர், இதை சாகிப் பயிற்சி மைய மாணவிகள் 10 பேர் மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டனர்.

