நடிகர் அஜித் குமாரின் 51- வது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரியில் உள்ள அஜித் ரசிகர் மன்ற கிளை மன்றம் சார்பாக இலவச உணவு மரக்கன்றுகள் ஆகியவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் பாலாஜி, முருகன், ஸ்ரீதர், ரவி, விஜி, திருப்பதி ஆகிய பொறுப்பாளர்கள் சார்பாக சோகத்தூர் அருகே செயல்பட்டு வரும் "MERCY HOME " காப்பகத்துக்கு மதிய அசைவ உணவு வழங்கப்பட்டது, இதில் மாவட்ட நகர ஒன்றிய மாணவரணி இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த நிகழ்வாக தர்மபுரி நகர இளைஞரணி சார்பாக ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விருப்பாச்சிபுரம் பிடமனேரி தருமபுரி அருகே உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா பென்சில் ஆகியவை வழங்கப்பட்டது இந்நிகழ்வை இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.