நேரு யுவகேந்திரா சார்பில் கெட்டுஹள்ளியில் யோகா பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 மே, 2022

நேரு யுவகேந்திரா சார்பில் கெட்டுஹள்ளியில் யோகா பயிற்சி.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் கெட்டு அள்ளி கிராமத்தில் வருகின்ற ஜுன் மாதம் 21ந்தேதி 8வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடும் நோக்கில், அதன் ஒரு பகுதியாக இன்று யோகா பயிற்சியானது  சேசம்பட்டி சாரதி யோகா பயிற்சி மைய ஆசிரியர் பார்த்தசாரதி தலைமையில்  நடைபெற்றது.

எர்ரபையனள்ளி ஊராட்சி தலைவர் சிலம்பரசன் தலைமை வகித்து மேலும் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார். நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் துவக்க உரையாற்றினார்.


அரசு உயர் நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனுசாமி, அறநெறி  சிறப்பு பள்ளி ஆசிரியர் செம்பன், மானுட திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் உதவி இயக்குநர் ஆனந்த் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.யோகா பயிற்சியில் 100க்கும் மேலான மகளிர், இளைஞர் மன்ற நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி எடுத்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து மானுட திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சேசம்பட்டி சாரதி யோகா மையம் இணைந்து செய்தது குறிப்பிடத்தக்கது.நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் முனியப்பன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad