பெரியார் பல்கலைக்கழக முதல்நிலை விரிவாக்க மைய ஆங்கில துறையின் என்லிட்ரசியா லிட்ரரி அசோஷியேஷன் சார்பாக சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் காரைக்குடி சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஆர் சி ஷீலா ராயப்பா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "இந்திய ஆங்கில இலக்கியத்தில் உயர்வு பெற்ற பெண்களின் கதாபாத்திரங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து ராமநாதபுரம், கமுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருமதி பாக்கியசீமா அவர்கள் "தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்கான திறன்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் முனைவர் பொ. மோகன சுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்றினார்.
ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர் சி. கோவிந்தராஜ் அவர்கள் துவக்க உரையாற்றினார். ஆங்கில துறை உதவி பேராசிரியர் முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி அபிநயஸ்ரீ வரவேற்றார். செல்வி மீனாட்சி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
இறுதியாக முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவன் சக்திவேல் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் செந்தில்குமார் நந்தகுமார், முதுகலை மாணவர்கள் சமீர், லெனின், கோகுல் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக