தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளரும், தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி. வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் தருமபுரி டிஎன்சி மகாலில் நடைபெற உள்ளது, இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாயகர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சி பேரூரையாற்றுகின்றனர்.
இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க மாநில. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், இளம்பெண்கள் சங்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பசுமை தாயகம், ஊடக பேரவை. பசுமை சமூக முன்னேற்ற சங்கம். வி வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் விடுத்துள்ளார்.