கல்லூரியின் முதல்வர் முனைவர் ப,கி, கிள்ளிவளவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கலைச்செல்வன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் ஒலிம்பிக் கொடியினை ஏற்றி வாழ்த்துரை வழங்கினார், கல்லூரி முதல்வர் அவர்கள் கல்லூரி விளையாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.
மேலும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான, அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுப்பொருள் வழங்கப்பட்டது, விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு.பாலமுருகன், அவர்கள் செய்திருந்தார்.