இந்நிகழ்ச்சியின் தலைமை உரையாகக் கல்லூரியின் தாளாளர் மூகாம்பிகை திரு கு. கோவிந்தராஜ் அவர்கள் தமிழ்த் துறை நடத்தும் கருத்தரங்கு பண்பாட்டின் அடிப்படையில் இலக்கியங்கள் மூலம் ஏராளமான கருத்துக்கள் வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளதை அனைவராலும் உணரக்கூடிய வகையில் இருக்கின்றன. உங்கள் வாழ்வில் உன்னதமான இந்நிகழ்வுகளைக் கற்றுக்கொள்வதற்குத் தமிழ் இலக்கியங்கள் உங்களைப் பெருமைப்படுத்தும் என்பதே இவ்விழாவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது இன்று கூறினார்.
முதல் அமர்வில் வாணியம்பாடி இஸ்லாமியத் தன்னாட்சி கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் பா.சிவராஜ் அவர்கள் சங்க இலக்கியங்களில் வீரமகளிர் என்ற தலைப்பிலே சங்க இலக்கியங்களில் உள்ள பல்வேறு பெண்பாற் புலவர்களின் சிறப்புகளையும் அவர்களின் தனித்தன்மையையும் வாழ்க்கையின் இனிமையையும் சுட்டிக்காட்டிக் குறிப்பாக ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளிவீதியார், தகடூர் அதியமான் அவைக்களப் புலவர் அவ்வையார் வரை நாற்பத்தி ஒரு புலவர்களின் மாண்புகளையும் செம்மொழி இலக்கியங்களையும் தனித் தன்மைகளையும் எடுத்துக்கூறி மாணவிகளுக்கு வீரம் சார்ந்த நிகழ்வுகளை விளக்கிக் கூறினார் மேலும் தமிழ் இலக்கியங்களைக் கற்றால் இன்று நாடு அளவில் பெரிதும் போற்றக் கூடிய இந்திய அரசுப் பணி மற்றும் மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் முழுமையான வெற்றியடைவதற்குத் தமிழ் இலக்கியங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று சிறப்புரையாற்றினார்.
இரண்டாவது அமர்வில் ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழக தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையின் பேராசிரியர் முனைவர் த. விஷ்ணு குமாரன் அவர்கள் காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் மகளிர் என்ற தலைப்பில் நவீனக்கால இலக்கியங்கள் கூறும் பல்வேறு படைப்பாளர்கள் தன்னுடைய படைப்புகளில் பெண்களின் தனிச் சிறப்புகளையும் சமூகத்தில் அக்கறையுள்ள பெண்களில் முன்னேற்றத்தையும் குறிப்பிட்டு பெண்கள் தற்காலத்தில் அவர்கள் வகிக்காத பதவிகள் இல்லை என்று பல்வேறு பெண் படைப்பாளர்களை வரிசைப்படுத்தியும் உதாரணங்களையும் மாணவிகளுக்குப் பயனளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார். இரண்டு அமர்வுகளிலும் மாணவிகள் சிறப்புரை வழங்கிய வல்லுநர்களிடம் கலந்துரையாடல் மூலம் பல்வேறு வினாக்களை எழுப்பி தங்களுடைய ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர்.
கருத்தரங்கின் நிறைவாக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் த.மு ஆனந்த் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் மாணவிகள் பல்வேறு துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.