தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள அண்ணாமலை அள்ளி என்ற இடத்தில் விளை நிலங்களையொட்டியுள்ள வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் நடமாட்டம், ஊருக்குள் புகுந்துவிடாதபடி யானைகளை வனத்தின் உள் பகுதிக்குள் விரட்டியடிக்க பாலக்கோடு வனத்துறை தீவிரம்.
வனப்பகுதி வறண்டிருப்பதால் உணவு, தண்ணீர் தேடி நள்ளிரவு நேரங்களில், வனத்தைவிட்டு வெளியே வரும் யானைகள், அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது குறிப்பிடதக்கது.