ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.
தமிழ்நாட்டில் ஆண்டின் சராசரி மழை அளவு குறைந்ததும் மிகவும் வறட்சியானதும் பெரிய பாசனத் திட்டங்கள் இல்லாததும், சிறு-குறு விவசாயிகளை நிறைந்ததும், மானாவாரி பயிர்களை செய்து வாழும் விவசாயிகள், 90 சதவீதம் கொண்டதும் எவ்வித தொழில் வசதியும் வேலைவாய்ப்பும் இல்லாததுமான தர்மபுரி மாவட்டத்திற்கு வாழ்வாதார திட்டம் வளர்ச்சித் திட்டம் கனவு திட்டமான காவிரியில் ஒகேனக்கல் பகுதியில் இருந்து ஏரிகளுக்கு நீரேற்று மூலம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளை நிரப்பும் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.