பின்னர் தலைமை ஆசிரியர் நரசிம்மன் சொந்த செலவில் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து பள்ளியில் அடிப்படை தேவையை பூர்த்தி செய்தார். பின்னர் அவர் முயற்சி யின் காரணமாக அப்பள்ளியில் தற்போது 1-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை 324 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பிறகு இப்பள்ளியில் படித்து பணியில் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் உதவிகளுடன் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி நுழைவு வாயில், ஸ்மாட் வகுப்பறை, அனைத்து வகுப்புகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், அதே போல் ஒவ்வொரு வகுப்புகளிலும் ஒலிபெருக்கிகள் மற்றும் கலைஅரங்குகள் என தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளியை தரம் உயர்த்தி உள்ளார்.
தலைமையாசிரியர் நரசிம்மன் நேற்று பள்ளிக்கு கொடுத்த சீரை மேளத்தாலங்களுடன் ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளிக்குகொண்டு சென்றார். பிறகு பள்ளிக்கு சீர்கொடுத்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் மாவட்ட முன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கலந்துகொண்டு பள்ளிக்கு உதவியவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
மேலும் அவர் பேசும்போது தமிழ்நாட்டிலேயே இது போன்ற ஒரு நிகழ்வு எந்தவொரு அரசுப் பள்ளிகளும் நடைபெறவில்லை. ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் பகுதி பள்ளிக்கு இந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து கல்வி சீர் வழங்கியது இதுவே முதல் நிகழ்வு. இதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்றால் அரசு பள்ளிகளின் தரம் உயரும் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார்.