இப்போட்டிகளில் தனிநபராக பங்கேற்க வேண்டும். குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை. குரலிசைப்போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்யம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரிநெட், போன்ற கருவி இசைப்போட்டியிலும், பரதநாட்டியப் போட்டியிலும் அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள். கிராமிய நடனத்தில் கரகாட்டம் காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலைமக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.
மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரம் கலை பண்பாட்டுத்துறையின் சேலம் மண்டல அலுவலகத்தை தொலைபேசி எண் 0427-2386197 தொடர்புக் கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க தருமபுரி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.


