Type Here to Get Search Results !

குடும்ப அட்டைதாரர்களின் கவனத்திற்கு!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் "புழுங்கல் அரிசி" (Boiled Rice) அரிசி தலா 2 கிலோ வீதம் ஜுன்- 2022 மாதம் முதல் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் ஏதேனும் பெற விருப்பமில்லை எனில் "விட்டுக்கொடுத்தல் திட்டத்தின் மூலம்" (Give it Up) விட்டுக்கொடுக்கலாம்..

அவ்வாறில்லாமல் பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை நியாய விலைக்கடைகளில் பெற்று மூன்றாம் நபருக்கு விற்பனை செய்தால் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை காவலர்கள் மூலம் விசாரனை மேற்கொள்ளப்பட்டு மின்னணு குடும்ப அட்டையை "பண்டகமில்லா குடும்ப அட்டையாக" மாற்றம் செய்யப்படும். 

பொது விநியோகத்திட்டப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களிடம் விலைக்கு வாங்கும் வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் (Black Marketting) கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் லாரிகள் மூலம் அரிசி உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தல் செய்பவர்களின் வாகனங்கள் அரசுக்கு பறிப்பிழக்கம் செய்யப்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies