Type Here to Get Search Results !

5 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதி; சாலை மறியல்.

5 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் - அவதி பழைய பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா பேச்சுவார்த்தை நடத்தி பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.

அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் டிரான்ஸ்பார்ம் பாதிக்கப்பட்டு பழைய பேட்டை பகுதியில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் இந்த சூழ்நிலையில் இந்த மின்வெட்டை கண்டித்து தீர்த்தமலை - அரூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies