- தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு:01.07.2022 தேதியில் SC/ST - 18 முதல் 37, BC/BCM/MBC & DNC 18 முதல் 34, இதர பிரிவினர் 18 முதல் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மேற்படி தகுதிகளுடன் தருமபுரி மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதி நேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல் இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும், மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது, மேலும், பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கூடுதல் கட்டிடத்தில் மேல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் மேலும் விவரங்களுக்கு 04342-231861 என்ற தொலைபேசி எண் மற்றும் https://dharmapuri.nic.in என்ற இணைய தளத்தை காணவும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக