தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கே.எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாள் விழா தொண்டர்களால் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் அரூர் அதிமுக சார்பில் அரூர் அருகேவுள்ள ஊத்துப் பள்ளத்தில் உள்ள லிட்டில் டிராப்ஸ் ஆஷ்ரமத்தில் அதிமுக கட்சியினர், அரூர் ஒன்றிய செயலாளரும், அரூர் சட்டமன்ற உறுப்பினருமான வே. சம்பத்குமார், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், வழக்கறிஞருமான ஆர்.ஆர்.பசுபதி, அரூர் நகர செயலாளர் ஏ.ஆர்.எஸ்.எஸ்.பாபு (எ) அறிவழகன், வீரப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுண்சிலர் மோகனபிரியா சீனிவாசன், மோப்பிரிபட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, அரூர் ஜெ. கே.ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக