பாலக்கோடு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அமமுகவினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இனைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அதிமுக நகர கழக செயலாளர் ராஜா தலைமையில் பாலக்கோட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இசுலாமிய ஆண்கள், பெண்கள் உட்பட மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அமமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இனைத்துக் கொண்டனர்.
இணைந்த அனைவருக்கும் கட்சி துண்டும், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில், முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.வி.ரங்கநாதன் மற்றும் கட்சி தொண்டர்களும் கழக உடன்பிறப்புக்களும் திரளாக கலந்து கொண்டனர்.