தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் மகன் சரவணன் (35) இவர் தனியார் பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி விஜயலட்சுமி (31) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகிறார்.
இவர் இன்று மதியம் ஒரு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி உள்ளார். இவரது மனைவி காலையிலேயே பள்ளிக்கு சென்று விட்டார். மீண்டும் பள்ளி முடித்து மாலை வீடு ராஜேஸ்வரி திரும்பவே வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைப்பெட்டி கீழே விழுந்து கிடந்தது. பின்னர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் வேலுதேவன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கைரேகை நிபுணர் வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சாலை ஓரத்தில் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.