இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அமர மேசை நாற்காலி வேண்டும் என அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்களிடம் கோரிக்கை வைத்து இருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று வீரப்பாநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொது மேம்பாட்டு நிதிலிருந்து 1.50 லட்சம் மதிப்பீட்டில் 25 மேசை நாற்காலி உள்ளிட்டவைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அப்பள்ளியில் 8, ஆம் வகுப்பு இறுதி ஆண்டு பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசாக இனிப்புகள் மற்றும் டீப்பன் பாக்ஸ் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஆர் பசுபதி, தெற்கு ஒன்றிய பொருளாளர் தெற்கு ஒன்றிய சாமி கண்ணு, தலைவர் சிவன், கிளை செயலாளர்கள் முருகன் பூபாலன் சென்னன், ராமமூர்த்தி, கல்யாணி, திருப்பதி, ஈட்டி சங்கர், செல்வராஜ், ஜெய்சங்கர், அன்பு, சிவமணி, பாளையம் கிளை செயலாளர் சென்னன், ஜே ஜே நகர் கிளை செயலாளர் ஜெ.ஜெ.நகர் கிளை செயலாளர் வே.சீனு, கூட்டுறவு இயக்குனர் வே.செந்தில், வே.சம்பத் தலைமை ஆசிரியர்வசந்தா, உதவி ஆசிரியர் சாலத்தோப்பு, ஆசிரியர்கள் சரவணன், சிலம்பரசி, ரோசி, சரண்யா, மாங்குயில், ராஜ்குமார், கவிப்பிரியா, மற்றும் பெற்றோர்கள் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.