பாப்பிரெட்டிப்பட்டி அருகே பேரூராட்சி பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகிலுள்ள கிராமப்புற விவசாய நிலங்களில் புகுந்து பயிர்கள் சேதம் ஆவதுடன் மட்டுமன்றி விவசாய நிலமும் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய விளை நிலங்களும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் இருந்து கால்வாய்கள் வழியாக வெளியேற கூடிய சாக்கடை கழிவுநீர் விவசாய நிலங்களில் புகுந்து விவசாய விலை பயிர்கள், கால்நடை தீவனப்புல் உள்ளிட்டவைகள் சேதம் அடைவதாகவும், மேலும் கிராமப்புறங்களில் முறையாக குடிநீர் வினியோகம் இல்லாததால் கிராம மக்கள் தங்களது விவசாய தோட்டத்தில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த பேரூராட்சி பகுதிகளில் இருந்து வரக்கூடிய சாக்கடை கழிவு நீரானது விவசாய நிலங்களில் புகுந்து மண்ணில் இறங்கி நிலத்தடி நீருடன் கலந்து கிணற்று நீர் மற்றும் ஆழ்துளை கிணறு உள்ளிட்டவற்றில் தற்போது கலந்து மக்கள் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்.
அதேபோல் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் கூட தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர், மேலும் தொடர்ந்து இந்த சாக்கடை கழிவுநீர் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதால் கால்நடைகளுக்கு அடிக்கடி நோய்தொற்று ஏற்படுவதாகவும் மேலும் அப்பகுதியில் விவசாய ஒருவர் வளர்த்து வந்த மாடு-1 கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதாகவும். தொடர்ந்து மக்களும் இதை பயன்படுத்துவதனால் கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய் தொற்றுகள் ஏற்படக்கூடும் என அச்சமடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து பலமுறை கிராம நிர்வாக அலுவலர் மட்டுமன்றி வட்டாட்சியர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து பல தடவை கோரிக்கை மனு அளித்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர் எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் விவசாய நிலங்களையும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளையும், மக்களையும் கருத்தில் கொண்டு நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர் வளங்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


