கோடை விமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மே, 2022

கோடை விமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் இங்கு தமிழகம் மட்டும் அல்லமால் அண்டை மாநிஙலங்களிலிருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஒகேனக்கல்லின் இயற்க்கை அழகை கண்டு ரசிப்பார்கள்.

இந்நிலையில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் இன்று ஞாயிற்று கிழமையையொட்டி கோடை விடுமுறையை கொண்டாட தமிழகம் மட்டும்அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இங்கு வந்துள்ள சுற்றுலா பயணி்கள்  ஆயில் மசாஜ் செய்துக்கொண்டு அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தனர். மேலும்  அப்பகுதியில் சமைிக்கும் மீன் குழம்புகளை ரசித்து சாப்பிட்டு சென்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad