கொங்கவேம்பு ஊராட்சி பாரதிபுரம் கிராம மக்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரூர் தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கையின்மையால் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கொங்கவேம்பு கிராம ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 140 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
இதைத்தவிர இந்த கிராமத்தில் எதிர்கால தேவைக்காக பொது இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுதற்போது, பொது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர் மேலும் எதிர்கால நலன் கருதி வழங்கப்பட்டப பொது இடத்தை விவசாய நிலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவே, கிராம மக்களின் எதிர்கால தேவைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல், பாரதிபுரம் குடியிருப்பு பகுதியிலுள்ள வீடுகளின் நில ஆவணங்கள் வருவாய்த் துறையில் கணினி வழியாக இணைய தளத்தில் வீட்டு மனைப்பட்டாகளை தனித் தனியாக கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சமுதாயக் கூடம் நூலகம் அங்கன்வாடி பள்ளி விளையாட்டு மைதானம் தேவை என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக