இதில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி வீடுகள், விற்பனை வளாகங்கள் தொழில் நிறுவனங்கள் மட்டும் உணவகங்கள் தோறும் நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மறுசுழற்சிக்குரிய பொருட்களை தயாரிக்கவும், மக்கும் கழிவுகளை தனியாகவும் கையாண்டு இயற்கை உரமாக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாலக்கோடு பேரூராட்சியில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனி தனித்யாகவும், ஈரக் கழிவு, உலர்கழிவு, மின்கழிவு மற்றும் அபாயகரமான கழிவுகளை பிரித்து தினசரி தங்களை தேடி வரும் பேரூராட்சி தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை பயன்படத்தினால் அபராதம் விதிக்கப்படும், அதற்கு மாறாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். கடைகள், உனவகங்கள், மீன், இறைச்சி கடைகளுக்கு செல்லும் போது, துணிப்பை, தூக்கு பாத்திரம் கொண்டு செல்ல வேண்டும், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை இலவசமாக விநியோகம் செய்து பாலக்கோடு பேரூராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து நகரத்தின் முக்கிய வீதிகளான ஸ்தூபி மைதானம், பேருந்து நிலையம் வழியாக தக்காளி மண்டி வரை ஊர்வலமாக சென்று கோஷமிட்டு, பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் சாமுவேல்ராஜ், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

