Type Here to Get Search Results !

தருமபுரியில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்று புகைப்படக் கண்காட்சி.

இந்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்  மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை நடத்திய  இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து புகைப்படக் கண்காட்சி தருமபுரி செந்தில் நகரில் வின்சென்ட் திருமண மண்டபத்தில் நடைபெற்றது வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது . சென்னை மத்திய அரசின் கள கண்காட்சி அலுவலர் ஏ.ஆர் வித்யா போட்டியினை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். 

ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ.இம்தியாஸ் முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்ட கள விளம்பர உதவியாளர் வீரமணி மற்றும் தஞ்சாவூர் களவிளம்பர உதவியாளர் அருண்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ்  சிறப்புரை வழங்கினார்.  

போட்டியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies