சோமனஅள்ளியில் ஸ்ரீஅக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 மே, 2022

சோமனஅள்ளியில் ஸ்ரீஅக்குமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  சோமனஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஆயிரம் ஆண்டு பழையான பிரசித்தி பெற்ற ஸ்ரீஅக்குமாரியம்மன் கோயில்  திருவிழா சித்திரை மாதத்தில்  வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா லாக்டவுன் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோயில் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது.இன்று  அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதையடுத்து

சோமனஅள்ளி, கசியம்பட்டி, பி.கொல்லஅள்ளி, பொடுத்தம்பட்டி, கொம்மநாயக்கன்பட்டி, சவுளுர், அழகம்பட்டி, கோடியூர், முருக்கம்பட்டி, கோயிலூரான் கொட்டாய், பாப்பிநாயக்கனஅள்ளி, சின்னபாப்பிநாயக்கனஅள்ளி ஆகிய 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு, பூங்கரகம், பால்குடம்,எடுத்தும். அலகுகுத்தி பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும்  ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் சாட்டை வேப்பிலை எடுத்தும்  சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு  அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. 

இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad