இம்முகாமில் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு கண்புரை, கண் பார்வை குறைவு, கண்களில் நீர் வடிதல், குழந்தைகளின் கண் நோய், பிறவி கண்புரை,மாறு கண் மற்றும் மாலைக்கண் போன்ற குறைகள் கண்டறிய தர்மபுரி மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் அரிமா செந்தில்குமார் தலைமையில் பரிசோதனை நடைப்பெற்றது.
இம்முகாமினை ராஜாமணி மளிகை ஸ்டோர் உரிமையாளர் சரவணன், ஓம் முருகா பேங்கர்ஸ் உரிமையாளர் தாரா சரவணன், மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
பாலக்கோடு அரிமா சங்க தலைவர் சீனிவாசன், முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் ராஜா, செயலாளர்கள் சரவணன், தியாகசீலன், பொருளாளர் முத்து, இயக்குநர்கள் கோவிந்தசாமி, ராஜகோபால், தருமன், சிவாஜி, பச்சியப்பன், டாக்டர். பாலகிருஷ்னன், எஸ்.எஸ்.எல் ஜூவல்லரி உரிமையாளர் பாலாஜி, வாசவி தங்க மாளிகை உரிமையாளர் பத்ரிநாராயணன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 455க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டதில் 322 பேர் அறுவை சிகிச்சைக்கு செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை செல்ல இலவச பஸ் வசதி செய்து தரப்பட்டு உள் விழிலென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்துகள், தங்கும் வசதி உணவு உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.