தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பாலக்கோட்டில் தொ.மு.ச.அலுவலகத்தை திரு செங்குட்டுவன், மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணகிரி (கிழக்கு) சிறப்பு தலைவர் TNSTC தொ.மு.ச. அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதையடுத்து மேடை கூட்டம் நடைபெற்றது.
இதில் தருமபுரி மாவட்ட கழக செயலாளர்கள்.தடங்கம் சுப்பிரமணி. இன்பசேகரன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிமனை தலைவர் தொ.மு.ச. சா.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்பு யுவராஜ் பணிமனை செயலாளர். தொ.மு.ச. பேரவை செயலாளர் பொதுச் செயலாளர் பா கிருஷ்ணன், பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குட்டி. பாலக்கோடு நகர செயலாளர் பி கே முரளி. காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி சி ஆர் மனோகரன், மற்றும் இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.