தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல். ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே வரத்தொடங்கியுள்ளன. ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் தொங்குபாலம் மேல் நின்று மெயின் அருவி கண்டு ரசித்தனர், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவர்பணி, சினி அருவி, உள்ளிட்ட அருவிகளை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் சுவையான மீன் சாப்பாடு உண்டு மகிழ்ந்தனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க ஒகேனக்கல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.