பயிற்சி முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ச.கோமதி அவர்கள் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். பேரூராட்சி தலைவர் திருமதி.டி.பிருந்தா அவர்கள் தலைமை ஏற்று பயிற்சி முகாமினை துவக்கி வைத்து வைத்தார். பயிற்சி முகாமில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்பாடுகள், பொது சுகாதாரத்தினை பேணிக்காப்பது, பேரூராட்சி பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன்னார்வ தொண்டு நிறுவன பயிற்சியாளர் திரு.பொன்னரசு அவர்களால் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மன்றத் துணைத்தலைவர் திருமதி.ரா.மல்லிகா, மன்ற உறுப்பினர்கள் திரு.வ.அண்ணாமலை, திருமதி.சி.பத்மா, திரு.ரா.தமிழ்செல்வன், திருமதி.மா.சரிதா, திருமதி.தி.மாலா, திருமதி.ஹாஜிராபீ, திருமதி, பூங்குழலி பிரகாஷ், திரு.வேவிஸ்வநாதன், திருமதி.கல்பனா, திரு.ம.தர்மலிங்கம், திரு.ர.விஜய்ஆனந்த், திரு.ஜபியுல்லா, திருமதி.மு.தமிழ்செல்வி முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு.ரா,திருவேங்கடம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் சமுதாய அமைப்பாளர் செல்வி.லாவண்யா நன்றி தெரிவித்துக்கொண்டார்.

