கடத்தூர் வியாபாரிகள்மற்றும் பொதுமக்கள் சார்பாக இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதை திறந்து வைத்து டிஎஸ்பி பேசியபோது அதனால் சினிமா பாத்திமா அவர்கள் பேசியதாவது தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் அதிகப்படியான கேமராக்கள் இந்த காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குற்றவாளிகள் குற்ற சம்பவங்கள் தடுக்கவும், பொதுமக்கள் வெளியூரிலிருந்து வரும் ஆட்கள் யார் யார் எனத் துல்லியமாக தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும், அனைத்து வீடுகளிலும் பாதுகாப்பு கருதி கேமராக்கள் பொருத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
நிகழ்சியில் எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ் எஸ்.ஐக்கள் நேரு, முருகன், ராமகிருஷ்ணன்,காவல் நிலைய காவலர்கள், கண்ணப்பன், சந்தோஸ், சங்கர், ரவீந்திரன், நாகராஜ் குப்தா, முருகன் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.
- எஸ் நந்தகுமார் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்.


