பள்ளி மாணவிய கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 மே, 2022

பள்ளி மாணவிய கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

தருமபுரி மாவட்டம் இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று மஞ்சவாடி கணவாய் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை மீட்டனர். மாணவியை கடத்தி இளம் வயது திருமணம் செய்தது தொடர்பாக அஜீத்குமாரை போலிசார் கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அரசு தரப்பு வக்கீல் திருமதி.கல்பனா அவர்கள் ஆஜராகி வாதாடினார்.

வழக்கு விசாரணையின் முடிவில் அஜித்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து அஜித்குமாருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 8000/- ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி திரு.சையத் பர்க்கத்துல்லா அவர்கள் தீர்ப்பளித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.