ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக ஜக்கசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாகத் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் மூகாம்பிகை கு. கோவிந்தராஜ் அவர்கள் தலைமை ஏற்று மாணவிகள் டெங்குவில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்துப் பேசினார்.
வாழ்த்துரையாக கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் அவர்கள் முகாமின் சிறப்புகள் குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பூச்சியியல் நிபுணர் திரு. செல்வம் அவர்கள் டெங்கு குறித்தும், அதிலிருந்து நம்மையும் தற்காத்துக் கொள்வது குறித்தும் மாணவிகளிடம் விளக்கினார்.
தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் திரு வெங்கடேசன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் ஆகியோர் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்கள்.அதனைத் தொடர்ந்து மாணவிகள் உட்பட அனைவரும் தேசிய டெங்கு ஒழிப்பு உறுதிமொழியேற்றனர்.
நிகழ்ச்சியில், மாணவிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி காருண்யா உட்படப் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.