இந்த பகுதிகளுக்கு பேருந்து வழித்தட நீட்டிப்பு இயக்க விழா பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவின் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து, எண்.8 நகர பேருந்து பென்னாகரம் - ஏமனூர் பகுதிக்கு நெருப்பூர், ஒட்டனூர் வழி தடத்திலும், 742B புறநகர பேருந்து பென்னாகரம் மேச்சேரி பகுதிக்கு முதுகம்பட்டி, வெள்ளமண்காடு வழி தடத்திலும், நகர பேருந்து எண் 1 பென்னாகரத்திலிருந்து நாகனம்பட்டி பகுதிக்கு தாசம்பட்டி, மருக்காரம்பட்டி, பவளந்தூர் வழித்தடத்திலும், நகர பேருந்து எண் 7 பென்னாகரத்தில் இருந்து முதுகம்பட்டி பகுதிக்கு ராஜாவூர் காலனி, தாசர்குந்தி வழித்தடத்திலும், நகர பேருந்து 26c, பென்னாகரம் -தருமபுரி பகுதிக்கு மாங்கரை நல்லாம்பட்டி இண்டூர் வழித்தடத்திலும், நகர பேருந்து எண்.4 தருமபுரியிலிருந்து தாசம்பட்டி பகுதிக்கு பாப்பாரப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, பவளத்தூர் வழித்தடத்தில் இயங்குவதற்கான நீட்டிப்பு சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
மே 18, 2022
0
பென்னாகரம் பகுதியிலிருந்து செல்லக் கூடிய 6 வழித்தடத்திற்கான பேருந்து நீட்டிப்பு சேவையை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தொடங்கி வைத்தார், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியிலிருந்து நெருப்பூர் வழியாக ஒட்டனூர் பகுதி, மேச்சேரி பகுதிக்கு முதுகுகம்பட்டி வழியாகவும், மருக்காரம்பட்டி பகுதிக்கு கோடுப்பட்டி வழியாகவும், பெரிய தொட்டம்பட்டி பகுதிக்கு எட்டியாம்பட்டி வழியாகவும், தருமபுரியில் இருந்து பவளந்தூருக்கு பாப்பாரப்பட்டி வழியாக புறநகர் பேருந்து மற்றும் நகரப் பேருந்து சேலம் மண்டல போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வந்தது.
Tags