பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தர்மபுரி மேலாண்மையியல் துறை இணைந்து நடத்திய "ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்" நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னதாக இயக்குனர் (பொ) முனைவர் மோகன சுந்தரம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் "ஏற்றுமதி இறக்குமதி" சம்பந்தமான கேள்விகளுக்கு மாணவர்களிடம் திரு. சுகுமாரன் அவர்கள் வெற்றி விநாயகா ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் தர்மபுரி அவர்கள் சிறப்புரை வழங்கினார் இரண்டாவது நிகழ்வாக தொழில் முனைவோர் அமைப்பு சார்பாக ஓராண்டுக்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் நிறைவு விழா முனைவர் பழனிவேல் பேராசிரியர் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தொழில் முனைவோர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேலாண்மையில் துறைத்தலைவர் (பொ) முனைவர் பி கார்த்திகேயன் அவர்கள், மற்றும் ஆர் டி சுரேஷ் உதவிப்பேராசிரியர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

