அரூர் பேரூராட்சி சார்பில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை அதன் தலைவர் இந்திராணி தனபால் தொடக்கி வைத்தார். நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து, மஞ்சப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பைகளை வழங்கினர். ஊர்வலம் மஜித்தெரு பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்றது.
இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.கலைராணி, துணைத் தலைவர் சூர்யா து.தனபால், துப்புரவு ஆய்வாளர் கோ.சிவக்குமார், வார்டு உறுப்பினர்கள் முல்லைரவி, பெருமாள், முசரத், அன்புமணி, உமாராணி, அருள்மொழி, மகாராணி, ஜெயலட்சுமி, சரிதா பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

